Establishment : Miscellaneous (During 2011)
1. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 13.1.2011 அன்று சட்டப்பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசும்போது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்களது தொகுப்பூதியம் 1.1.2011 முதல் ரூ.2000/- என நிர்ணயித்து ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண்.15 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி(இ5) துறை, நாள் : 07.02.2011.
2. பணியமைப்பு - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - 13.1.2011 அன்று சட்டப்பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் உரையின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதிலளித்து பேசும்போது மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு - மக்கள் நல பணியாளர்களுக்கு கிராம ஊராட்சியில் ஊதியம் வழங்குவதை மாற்றி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மூலம் ஊதியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண்.16 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி(இ5) துறை,நாள் : 07.02.2011.
3. பணியமைப்பு - கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களின் பணி நிறைவு பெறும் வயது 60 என நிர்ணயித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. அரசாணை (நிலை) எண்.17 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி(இ5) துறை, நாள்.10.02.2011