சமீபத்திய செய்திகள்

Date : 22-02-2024
...

நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் மத்திய அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டம் டிசம்பர் 23, 1993 அன்று அப்போதைய இந்தியப் பிரதமரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தந்தத் தேவைக்கேற்ப நீடித்து நிலைக்கக் கூடிய சமுதாய சொத்துக்களை உருவாக்குவதை வலியுறுத்தும் வளர்ச்சிப் பணிகளைப் பரிந்துரை செய்ய உதவுவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.nbspநாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகளைப் பரிந்துரைத்து ஒப்புதல் அளிக்கும்போது, நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுமங்கள், செயல்படுத்தும் மாவட்ட குழுமங்கள் மற்றும் செயல்படுத்தும் முகமைகள் பின்பற்ற வேண்டிய அடிப்படைக் கோட்பாடு என்னவென்றால், இது சமுதாயத்தின் பொது நலனுக்காக நீடித்த பொதுச் சொத்துக்களை உருவாக்க வழிவகுக்கிறது மற்றும் சமூகத்தின் எந்தப் பிரிவினரையும் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும் எந்தத் தடையும் இல்லை.