சமீபத்திய செய்திகள்

Date : 20-03-2024
...

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சட்டப் பேரவையில் 15.02.2024 அன்று கீழ்கண்ட அறிவிப்பை வெளியிட்டார்,

“தமிழகத்தில் 2001-ஆம் ஆண்டுக்கு முன்பாக பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் ஏறத்தாழ 2.50 லட்சம் வீடுகள் கட்டப்பட்டன. கிராமப்புற விளிம்பு நிலை மக்களுக்காக கட்டப்பட்ட அந்த வீடுகள் ரூ.2000 கோடியில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் பழுதுபார்த்து, புனரமைக்கப்படும்”

அதனைத் தொடர்ந்து, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் nbspதுறை மூலம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் தற்போதைய நிலையை அறிய, Repairs to Rural houses (ஊரக வீடுகளின் பழுதுநீக்கம்) என்ற பெயரில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில், 2000-01க்கு முன் கட்டப்பட்ட 2,57,006 ஓடு வேயப்பட்ட மற்றும் சாய்வான கான்க்ரீட் கூரையுடைய 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டத வீடுகள், உடனடியாகப் பழுது நீக்கம் தேவைப்படும் தகுதியான வீடுகளாக அடையாளம் காணப்பட்டன.

இதன் அடிப்படையில், 2000-01 ஆம் ஆண்டு வரை கிராமப்புறங்களில் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை 2024-25 மற்றும் 2025-26 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மொத்தம் ரூ.1,954.20 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டது.

இச்சிறப்பு முயற்சியின் கீழ், ஓட்டு வீடுகளுக்கு சிறு பழுது நீக்கம் செய்ய சமவெளிப்பகுதிகளுக்கு ரூ.32,000/- மற்றும் மலைப்பகுதிகளுக்கு ரூ.42,000/- அல்லது களஆய்வின் அடிப்படையில் nbspதயாரிக்கப்பட்ட சரியான மதிப்பீடு மற்றும் பெரும் பழுது நீக்கம் செய்ய சமவெளிப்பகுதிகளுக்கு nbspரூ.70,000/- மற்றும் மலைப்பகுதிகளுக்கு ரூ.92,000/- அல்லது களஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சரியான மதிப்பீடு இவற்றில் எது குறைவோ அந்த மதிப்பீடு, மேலும் சாய்வான கான்க்ரீட் கூரையுடைய வீடுகளைப் பொறுத்தமட்டில், சிறு பழுது நீக்கம் செய்ய சமவெளிப்பகுதிகளுக்கு nbspரூ.55,000/- மற்றும் மலைப்பகுதிகளுக்கு ரூ.72,000/- அல்லது களஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சரியான மதிப்பீடு மற்றும் பெரும் பழுது நீக்கம் செய்ய சமவெளிப்பகுதிகளுக்கு nbspரூ.1,50,000/- மற்றும் மலைப்பகுதிகளுக்கு ரூ.1,85,000/- அல்லது களஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சரியான மதிப்பீடு இவற்றில் எது குறைவோ அந்த தொகை நிதி உதவியாக வழங்கப்படும்.

விடுவிக்கப்படும் நிதியானது இரண்டு தவணைகளாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.nbsp